Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2021 20:00:40 Hours

பிரான்ஸ் ஜூடோ போட்டியில் பங்குபற்றும் இராணுவ ஜூடோ வீரர்களுக்கு இராணுவ தளபதி ஆசீர்வாதம்

ஒக்டோபர் 28 முதல் நவம்பர் 4 வரை பிரான்சில் நடைபெறவுள்ள உலக இராணுவ ஜூடோ சாம்பியன்ஷிப் - 2021 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 9 இலங்கை இராணுவ ஜூடோ வீரர்கள் பங்குப்பற்றவுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர் முப்படையின் 25 ஜூடோ வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரான்சிற்கு புறப்படுவதற்கு முன்னர் அந்த இராணுவ ஜூடோ வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (22) தேசிய விளையாட்டு தேர்வுக் குழுவின் தலைவரும் (NSSC) பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து அவரது அறிவுறுத்தல்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டனர்.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் இலங்கை விளையாட்டு குழு நேர்மையாகவும் தன்மானத்துடனும் ஈடுபடவேண்டும் மேலும் உயிரியல் குமிழி வழிகாட்டுதல்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் இராணுவத் தளபதி அந்த அணியிடம் கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் இராணுவ போர் கருவிகள் பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இராணுவ ஜூடோ குழு தலைவருமான மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க , இராணுவ ஜூடோ குழு தலைவரும் இராணுவ வைத்திய படையணியின் நிலையத் தளபதியுமான பிரிகேடியர் துசித ஹெட்டியாராச்சி, மற்றும் மேலும் சில அதிகாரிகள் இராணுவ தளபதி அலுவலகத்தில் இணைந்து கொண்டனர்.