Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2021 16:00:16 Hours

கிழக்குப் படையினரால் அம்பாறையில் வீடற்றவர்களுக்கு மேலும் இரண்டு புதிய வீடுகள் பரிசாக

கிழக்கில் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திக்கமைய இராணுவத்தால் வசதியற்ற குடும்பத்தினருகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட மேலும் இரண்டு வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றது. இதன் பிரதம அதிதியாக அம்பாறையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கலந்துக் கொண்டார்.

அம்பாறை பிரதேசத்தின் சிவில் அமைப்புக்கள் மற்றும் வர்த்தகர்களின் அனுசரணையில் 241 வது பிரிகேட்டின் 3 வது (தொண்) விஜயபாகு காலாட்படை மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரின் மனிதவளம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் இவ் இரண்டு வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டன.

அம்பாறை பெரியநீலவனையில் குழந்தைகளுடன் வசிக்கும் திரு கே நாகராஜா மற்றும் திருமதி குணரத்னன் சீதா ஆகியோரின் ஏழ்மை தன்மை 24 வது படைபிரிவு படையினர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமையை அடுத்து இவர்களுக்கான வீட்டு திட்டம் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவவின் மேற்பார்வையில் படையினரால் வீடுகளை நிர்மாணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதுடன், இரு புதிய வீடுகளும் சாலை, சாப்பாட்டு அறை, படுக்கையறைகள், சமையலறை, கழிவறை போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளதுடன் மேலதிகமாக படையினரால் அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வீட்டு திறப்பு விழாவின் போது கையளிக்க பட்டன.

இவ்விழாவில் 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லாமஹேவ, 241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திர அபேகோன், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக பிரதம சிவில் விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி, 24 வது படைப்பிரிவு மற்றும் 241 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரிகள், 3 வது (தொண்) விஜயபாகு காலாட்படை மற்றும் 11 வது தேசிய பாதுகாவல் படையின் கட்டளை அதிகாரிகள் , பொதுமக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.