Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd October 2021 07:00:29 Hours

படையினரால் ரிதிகஹவெவ சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு

ரித்திகஹவெவவில் 623 வது பிரிகேட்டின் 5 வது (தொண்) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் தம்மிக்க ஹேரத் அவர்களின் மேற்பார்வையின் கீழ் படையினால் ஞாயிற்றுக்கிழமை (17) திகதி சிரமதான பணி மன்னெடுக்கப்பட்டது.

62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர அவர்களின் அறுவுறுத்தலின் பேரில் இந்த சமூக சார் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெரும் போக பருவத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நீர் வழங்கும் நோக்கில் 1200 மீற்றர் நீளமுள்ள ரித்திகஹவெவ குளக்கரையை துப்பரவு செய்வதற்காக ரித்திகஹவெவ விவசாய சங்கமும் இராணுவ படையினரும் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணியில் 90 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் பங்கு கொண்டனர்