Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2021 08:48:53 Hours

கொவிட் 19 தடுப்பு செயலணி தலைவர் கொவிட்-19 பரவல் மற்றும் இறப்புகளைக் குறைப்பிற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு

இராஜகிரிய கொவிட் 19 பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையத்தின் செயலணிக் கூட்டத்தின் மேலும் ஒர் அமர்வு இன்று (22) பிற்பகல் கொவிட் கட்டுப்பாட்டு செயலணி தலைவரும், பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் செயலணி ஏனைய உறுப்பினர்கள் பங்குப்பற்றலில் இடம்பெற்றது.

ஜெனரல் சவேந்திர சில்வா இறப்பு விகிதங்கள் குறைதல், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மற்றும் புதிய தொற்றுக்களை கண்டறிதல் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார். மேல் மாகாணத்தில் 50- 70 புதிய தொற்றாளர்களும் ஏனைய மாவட்டங்களில் தற்போது பத்துக்கும் குறைவான புதிய தொற்றாளர்களுமே நாளொன்றுக்கு பதிவாகின்றனர். பொறுப்பான நடத்தை மற்றும் கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக குறைவான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. ஆனால் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது, நாட்டிற்கு வரும் விமானங்கள் மற்றும் பயணிகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தாலும் சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என தெரிவித்தார்.

வீட்டில் உள்ள நோயாளிகளை நிர்வகித்தல், இடைநிலைப் பராமரிப்பு நிலையங்களில் உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ளல் என்பவற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை வைத்தியர் சங்கம், சுகாதார அதிகாரிகள் மற்றும் பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 1906 உதவி சேவை தொற்றுநோய் கட்டுப்பாட்டிற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பிலும் கருத்து தெரிவித்தார். பொதுமக்கள் வெளியே சென்று மகிழட்டும் ஆனால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய கொவிட் ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில், மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 31 அன்று நீக்கப்படும் என்று ஜனாதிபதி எங்களுக்குத் தெரிவித்தார், ஆனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் நவம்பர் 1 முதல் பூஸ்டர் தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். அதேபோல், மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் ஒக்டோபர் 25 முதல் தொடங்கும் என்று அவர் அறிவித்தார்.

சுகாதார அமைச்சுடன் மேலும் கலந்துரையாடி எதிர்காலத்தில் தரம் 5 வரை வகுப்புகளை மீண்டும் தொடங்குவது, 59 சதவீத மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி திட்டம், சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆகியவற்றுக்கு பிறகு, பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இராணுவத் தளபதி ஜெனரல் சில்வா இந்த தேசிய தேவைக்கு அளிக்கப்பட்ட மகத்தான ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற பங்குதாரர்களும் இந்த அமர்வின் போது கருத்துகளை தெரிவித்தனர்