Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2021 08:00:34 Hours

623 வது பிரிகேட் வீடமைப்பு அதிகாரசபையுடன் இணைந்து புதிய வீடு நிர்மாணிப்பு

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவை (அக்டோபர் 10) முன்னிட்டு ஹோரவபத்தான மரதன்கடவளை திரு பி பீ ஜெயரத்னாவின் வறிய குடும்பத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட வீடு வழங்கப்பட்டது.

மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 623 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரொஹான் மெதாகொட அவர்களின் முயற்சியினல் இந்த புதிய வீடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகரவின் ஆசிர்வாதத்துடன் 623 வது பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலில் 5 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் தம்மிக ஹேரத்தின் மேற்பார்வையில் அப்படையணியின் சிப்பாய்களினால் வீடு நிர்மாணிக்கபட்டது.

அநுராதபுரம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர், பிரதேசத்தின் பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் சில உத்தியோகத்தர்களும் இப்புதிய வீடு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதேவேளை 623 வது பிரிகேட் தளபதி, வீட்டு வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன் வீட்டு உபயோகப் பொருட்களையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.