Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd October 2021 11:00:29 Hours

கூட்டு நன்கொடையாளர் குழு உலர் உணவு பொதிகளுடன் மன்னார் பயணம்

வித்யார்த்த கல்லூரி, ரோயல் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர்கள் திரு பிரசாத் லொகுபாலசூரிய அவர்களின் ஒருங்கிணைப்பில் மன்னார் 54 வது படைபிரிவின் 542 வது பிரிகேட்டின் 8 வது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் படையினர் மன்னார் சிலாவத்துறையில் 75 வரிய குடும்பத்தினர்க்கு உலர் உணவு பொதிகளை சனிக்கிழமை (16) வழங்கினர்.

அதே ஏற்பாட்டின் போது, மன்னார் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சிறப்பு உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன இந்த நிகழ்வு வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்களின் ஆசியுடன் 54 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர அவர்களின் மேற்பார்வையில் 542 வது பிரிகேட் தளபதி , 542 வது பிரிகேட் ஒருங்கிணைப்பு அதிகாரி, 54 வது படைபிரிவு சிரேஷ்ட அதிகாரிகள் , திரு பிரசாத் லொகுபாலசூரிய அவரகளுடன் நன்கொடையாளர் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றனர்