Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2021 06:50:27 Hours

சிங்கப் படையணியின் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே பொறுப்பேற்பு

மத்திய பாதுகாப்பு படைபிரிவு தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே சிங்கப் படையணியின் 15 வது படைத் தளபதியாக அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் திங்கட்கிழமை (11 ஒக்டோபர் 2021) மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அலுவலக பணிகளை பொறுப்பேற்றார்.

மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களை சிங்கப் படையணி பிரதி நிலையத் தளபதி, வரவேற்றதன் பின்னர் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதையையும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே தனது புதிய அலுவலகத்தில் சுப வேளையில் தனது பதவியேற்பிற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமைகளை ஏற்றுக்கொண்டார் படைத் தளபதியாக கடமைகளை முறையாக ஏற்றுக்கொன்றதன் பின்னர், தாய்நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்த சிங்கப் படையின் வீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து, மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே இந்த நினைவு நாளைக் குறிக்கும் விதமாக மரக்கன்றினை நாட்டியதுடன் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்ட் உணவறையில் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துக்கொண்டார்.

சிங்கப் படையணியின் புதிய படைத் தளபதி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதிகாரிகள் உணவறையில் இடம்பெற்ற மதிய உணவு விருந்துடன் விழா முடிந்தது. அனைத்து ஏற்பாடுகளும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இடம்பெற்றன.சேவையிலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவுக்குப் பதிலாக மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.