Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2021 17:31:27 Hours

இராணுவ தளபதிக்கு விஜயபாகு காலாட்படையணி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது

விஜயபாகு காலாட்படையணியானது 1988 இல் ஆரம்பிக்கப்பட்டதுடன் "கலை, கைவினை மற்றும் தொழில்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ன தாங்க முடியாதா’’ என்ற மகுடவாசகத்தினூடாக அப்படையணி படையினர் படையணித் தலைமையகத்திற்கு மேலும் வலு சேர்த்தனர். மேலும் விஜயபாகு காலாட்படையிணியின் தளபதி , அதிகாரிகள் மற்றும் சிபாய்களின் முயற்சிகளால் உயர் தரத்துடன் கூடிய அதிநவீன அணிவகுப்பு மைதானம் போயாகனையிலுள்ள அப்படையணித் தலைமையகத்தில் இன்று காலை (21) ஆரம்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், விஜபாகு காலாட் படையணியின் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைதலைமையகத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டியவின் அழைப்பின் பேரில், அன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மைதானத்தை திறந்து வைத்தார். விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் நுழைவாயிலில் அன்றைய பிரதம விருந்தினருக்கு இராணுவ முறைப்படி பாதுகாப்பு அறிக்கை இடல் மரியாதையளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய வரவேற்றார். பின்னர் அவர் விஜயபாகு காலாட் படையணியின் உயிர் நீத்த போர்வீரர்களின் நினைவுத்தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் அவர் உயிர் நீத்த பரம வீர பதக்கம்பெற்ற போர்வீரர்களின் விஷேட நினைவுத்தூபிக்கு மரியாதை செலுத்தினார் நினைவுத்தூபிக்கு பரம வீர விபூஷணாய பதக்கமானது உயர்ந்த இராணுவ அலங்காரமாக அங்கீகரிக்கப்பட்டது, தனிநபர் செயல்கள் மற்றும் மிகவும் விதிவிலக்கான வரிசையில் தனித்துவமான துணிச்சலுக்காக வழங்கப்பட்டது . சக தோழர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக தன்னார்வ அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட எதிரியின் முகத்தில் தைரியமான செயல்களுக்காகவும் இது வழங்கப்படுகிறது.

அந்த விஜயபாகு காலாட்படையிணியின் வீரர்களில் சார்ஜன்ட் எச்ஜிஎஸ் பண்டார மற்றும் பதவி நிலை சார்ஜென்ட் பீஎன் சுரங்க ஆகியோர் எதிரிகளிடம் இருந்து தங்கள் சகா தோழர்களைப் பாதுகாப்பதில் தன்னலமற்ற தற்காப்புச் செயல்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களின் மரணத்திற்கு பின்னர் பிரத்யேகமாக பீடபல்யுவீ பதக்கம் வழங்கப்பட்டது. ஜெனரல் ஷவேந்திர சில்வா ஒரு தனி பூங்கொத்து வைத்து, தனது அஞ்சலியை செலுத்தினார்.

மஹா சங்க உறுப்பினர்களின் ஆசீர்வாத்த்திற்கு மத்தியில் தலைமை விருந்தினரால் புதிய அணிவகுப்பு மைதானம் திறந்து வைக்கப்பட்டதுடன் அவரினால் அணிவகுப்பை மறுஆய்வு செய்யப்பட்ட அதேவேளை தளபதி அனைத்து படையினர் மத்தியில் உரையொன்றினையும் நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் அனைத்து விஜயபாகு காலாட்படையணியின் அதிகாரிகள் மற்றும் வொரண்ட் அதிகாரிகள் தனித்தனியாக குழு புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இராணுவத் தளபதி தனது உரையில், கடந்த சில ஆண்டுகளில் விஜயபாகு காலாட்படையணியின் தரம் உயர்வின் வரலாற்றையும் அதன் இளைய காலாட்படையணியாக அமைதிக்கான போரின் முடிவிற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியதன் வரலாற்றையும் நினைவு கூர்ந்தார்.

தேசத்தை கட்டியெழுப்புதல், கொவிட் கட்டுப்பாடு பணி ஆகியவற்றின் இராணுவத்தின் பங்களிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி, அவசர நடவடிக்கை படையணி, ட்ரோன் படையணி, இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை, பொறியாளர்கள் பிரிவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ பயிற்சி பிரிவு ஆகியவற்றின் விரிவாக்க படையணியாக உறுவாக்கப்பட்ட 1 வது இராணுவ படையணி தொடர்பாகவும் நினைவூட்டினார். அனைத்து படையினரின் நலனுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும், கண்டி பல்லேகலயில் புதிய இராணுவ வைத்தியசாலை நிர்மாணம் தொடர்பாகவும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதியில் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வருகையின் நினைவாக அவரினால் ஒரு மரக்கன்று ஒன்று நடவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்த இராணுவத் தளபதிக்கு அன்றைய விருந்தினருக்கான சிறப்பு நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டதுடன் அவரினால் நினைவு பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக்களையும் தனது கருத்துகளையும் பதவிட்டார்.

விஜயபாகு காலாட்படையணி நிறுவப்பட்டதிலிருந்து போர்க்களத்திலும் அனைத்து அவசரநிலைகளிலும் பேரழிவுகளிலும் இலங்கை இராணுவத்தின் உண்மையான காலாட்படை வீரர்களாக முன்னணியில் உள்ளது. நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக மொத்தம் 3049 விஜயபாகு காலாட்படை போர் வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தனர். இதேபோல், 2877 விஜயபாகு காலாட்படை போர் வீரர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவர்களாக மாறினர்.