Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2021 17:00:18 Hours

மேலும் 166 இராணுவப் பொலிஸ் சிப்பாய்கள் கிரிதலையில் இருந்து பயிற்ச்சி முடிந்து வெளியேறினர்

இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியில் புதிதாக பயிற்சி பெற்ற 166 பேர், கிரிதலை இராணுவப் பொலிஸ் பாடசாலையில் நடாத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை பாடநெறி எண் - 79 இனை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு திங்களன்று (11) வெளியேறினர்.

இராணுவ பொலிஸ் பாடசாலையின் தளபதி கேணல் சீவலி ராஜநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில், முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு பகுதி படைத் தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் அவர்கள் நிகழ்வின் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டார்.

சிறந்த பிலட்டூன் சார்ஜெனாக சார்ஜென் ஜேடிஇ ஜெயசேன, சிறந்த பிரிவு தளபதியாக கோப்ரல் எஸ்எம்டிஎஸ் சேனாநாயக்க, சிறந்த தேர்வாளராக ஏஎஸ்பி விஜேசேகர மற்றும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக எஸ்பிஎஸ் பண்டார ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன் பிரதம அதிதியிடம் இருந்து விருதுகளையும் பெற்றுக்கொண்டனர்.

ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி பிரிகேடியர் லக்ஷ்மன் பமுனுசிங்க மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நிலைய தளபதி ரமேஷ் சல்லே, மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.