Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2021 18:10:50 Hours

நாடளாவிய ரீதியிலுள்ள பாதுகாப்பு தலைமையகங்கள், படைப்பிரிவுகள், பிரிகேடுகள் மற்றும் கட்டளை அலகுகளின் ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வுகள்

இராணுவத்தின் 72 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு சாலியபுரவிலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளுக்கு இணையாக ஒக்டோபர் 1 முதல் 10 வரை அனைத்து பாதுகாப்பு படை தலைமையகங்களிலும் 72 வது இராணுவ ஆண்டு நினைவு விழா நிகழ்வுகள்

ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதற்கமைய யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது பொதுப்பணி பிரிகேடியர் டி.எம்.ஏ பண்டார மற்றும் சிரேஸ் அதிகாரிகளுடன் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது இராணுவ கொடி ஏற்றல், இராணுவ கீதம் இசைத்தல், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துதல். மௌன அஞ்சலி செலுத்தல், இராணுவ தளபதியின் செய்தியை வாசித்தல் முகாம் வளாகத்தில் மரனக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதேநேரம் 72 வது இராணுவ ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சமூக பணிகளின் ஒரு அங்கமாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் 521 பிரிகேடின் கீழான 11 வது விஜயபா காலாட் படைப்பிரிவினர், புத்தூரிலுள்ள செயின் லுகாஸ் முதியோர் இல்லத்தை தூய்மையாக்கி அங்கு அடைக்களம் பெற்றிருப்போருக்கான மதிய உணவையும் வழங்கினர்.

இந்நிகழ்வுகளில் 521 வது பிரிகேட் தளபதியின் அழைப்பின் பேரில் 52 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்தார். அத்தோடு, யாழ். மெதடிஸ் தேவாலயத்தின் பாதிரியார் வண. ஞானரூபன், புனிதர்கள் தேவாலயத்தின் பாதிரியார் வண. ரொபட் சசிகரன் அவர்கள் உட்பட பல்வேறு தேவாலயங்களிலுமுள்ள அருட்தந்தையர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அதேபோல் , முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இராணுவத் தளபதியின் ‘துருமிதுரு நவ ரட்டக்’ மற்றும் ஜனாதிபதியின் ‘சுரகிமு கங்கா’ திட்டத்திற்கு இணங்க இராணுவ தினத்தன்று (ஒக்.10) 10,000 மருத மரக்கன்றுகள் பிரிகேடுகள் மற்றும் கட்டளை அலகுகளுக்குள் நாட்டி வைக்கப்பட்டன.

இதற்கிடையில், மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பாவின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், படைப்பிரிவுகள் மற்றும் கட்டளை அலகுகளுக்குள் 10,000 மருத மரக்கன்றுகளை நாட்டிவைக்கும் நிகழ்வொன்றும் நடைபெற்றது. இத்திட்டம் இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைவான 'துருமித்துரு நவ ரட்டக்' மற்றும் ஜனாதிபதியின் 'சுரகிமு கங்கா' திட்டங்களுக்கு இணங்க (ஒக்.10) நடைபெற்றது.

அதேநேரம் கிழக்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளின் தளபதி டிஎம் அபேரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய சிப்பாய்களால் கைகோர்த்து கொண்டு மின்னேரியா தேவாலய வளாகத்தையும் மின்னேரியா ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்தையும் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. கிரிதலையிலுள்ள 2 வது இலங்கை இராணுவ ஆயுத படையினர் மற்றும் 2 வது இலங்கை இரணுவ பொலிஸ் படையினர்களால் முன்னெடுக்கப்பட்டதோடு குளக்கட்டுக்களை தூய்மையாக்குதல், அஞ்சலி செலுத்தும் நிகழ்விகளிலும் ஈடுபட்டனர்.

இதேபோல், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 561 பிரிகேட் தலைமையக தளபதி ஜி.பி.பி குலதிலக அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிப்பாய்களால் கனகராயன்குளம் கிராம சேவகர் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளிலும் 250 மரக்கன்றுகளை வழங்கி திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதேபோல், பூநகரியிலுள்ள 66 வது பிரிவின் 663 வது பிரிகேடின் கீழுள்ள 11 வது கஜபா படைணயினி சி்ப்பாய்களால் ஜெயபுரத்தில் வசிக்கும் திரு. யேசுநாதன் என்பவரின் வறிய குடும்பத்திற்கு 663 பிரிகேட் சிப்பாய்களா திரட்டப்பட்ட நிதியை கொண்டு புதிய வீடொன்று கட்டிகொடுக்கப்பட்டுள்ளதோடு அதனை பயனாளி குடும்பத்திடம் கையளிக்கும் நிகழ்வு 663 பிரிகேட் தளபதி பிரிகேடியர் பி.கே.ஜி.எம்.எல் ரோட்ரிகோவின் தலைமையில் இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தி தினத்தன்று வழங்கி வைக்கப்பட்டது.

அதேபோன்று மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவிலும் சிப்பாய்களால் இராணுவ கொடி ஏற்றல், இராணுவ கீதம் இசைத்தல், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துதல். மௌன அஞ்சலி செலுத்தல், இராணுவ தளபதியின் செய்தியை வாசித்தல் முகாம் வளாகத்தில் மரனக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் இராணுவத்தின் ஆண்டுபூர்த்தி நிகழ்வு கொண்டாடப்பட்டது. 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் படைப்பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து சிப்பாய்களால் நகரவெவ வனப்பகுதியில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் 40 மருத மர கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. அதேநேரத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் 62 வது படைப்பிரிவு சிப்பாய்களால் நீர்வளமுள்ள பகுதிகளான பதவிய குளத்தை அன்மித்த பகுதிகளில் 62 வது படைப்பிரிவு தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2000 மருத மரக் கன்றுகளை நாட்டி வைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

621 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கீர்த்தி பரகுன், 14 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் நிமேஷ் லியானகம, பதவிய பிரதேச செயலாளர் எம் ரலியுதீன் , மகாவெலி எல் பகுதி நிரந்தர திட்ட முகாமையளர் திரு கேஆர் ஹேரத், பதவிய உதவி நீர்பாசன பொறியியலாளர் டொக்டர் எஸ்பிபிஎஸ்ஏ ஷாந்த, . பதவிய வனவிலங்கு அதிகாரி திரு என்சி திஸ்ஸாநாயக்க, பதவிய வன பாதுகாப்பு அதிகாரி திரு எல் மனோகரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிப்பாய்கள் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.