Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2021 21:00:59 Hours

தெற்கு சூடானிலுள்ள படையினருக்கு உயிர்காப்பு பணிகளுக்கான பயிற்சி

தென் சூடானிலுள்ள தரம் II வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக செல்லவிருக்கும் படையினருக்கு மேம்படுத்தப்பட்ட உயிர் காப்பு பணிகள் தொடர்பிலான பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் புதன்கிழமை (6) கொழும்பு இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஐரோப்பிய உயிர்காப்பு பேரவையின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இப்பயிற்சிகளின் போது, ஒரு நாள் முழுவதுமான விரிவுரையுடன், கூட்டுச் செயற்பாடுகள் மற்றும் வள நிலைய பயிற்சிகள் என்பனவும் வழங்கப்பட்தோடு மேற்படி குழுவில் வைத்தியர்கள், தாதியர்கள் சத்திரசிகிச் அறை தொழில்நுப்வியலாளர்கள் உள்ளடங்களாக 25 பேர் பயிற்சிகளை பெற்றுகொண்டனர்.

இப்பயிற்சிகள் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் மயக்க மருத்துவ வைத்திய நிபுணரும் ஐரொப்பிய உயிர்காப்பு பேரவையின் பயிற்றுவிப்பாளரும் பயிற்சிக்கான பணிப்பாளருமான கேணல் சம்பிக அபேசிங்க அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிலுந்தது.