Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2021 20:40:59 Hours

காலி படையினரால் உணவுப்பொதிகள் விநியோகம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட் படையினர் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் காலி நகரத்தில் அநாதரவான நிலையிலிருந்தவர்களுக்கு உணவுப்பொதிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களை பகிர்ந்தளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேற்படி செயற்பாடு 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு அவர்களின் வழிகாட்டல்களுக்கமைய 613 வது பிரிகேட்டின் சிரேஸ்ட பணிநிலை அதிகாரி லெப்டினன் கேணல் பீஜ புஞ்சிஹேவா அவர்களின் வழிநடத்தலின் கீழ் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.