09th October 2021 11:09:03 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் சிப்பாய்களால் இறலக்குளம், பெரியவெட்டுவான் பகுதியில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது.
23 வது படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த அவர்களினால் மேற்படி சமூக திட்டத்தின் அவசியம் எடுத்துரைக்கப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட திட்டதிற்கான வழிகாட்டல்களை பின்பற்றி 23 வது படைப்பிரிவின் படையினரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை இந்து மத மரபுகளுக்கமைவான வியாழக்கிழமை (07) இடம்பெற்ற இவ்விழாவில் கலந்துகொண்ட கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களினால் பயானாளி குடும்பத்தினருக்கு வீட்டின் சாவி கையளிக்கப்பட்டது.
மேற்படி புதிய வீட்டை நிர்மாணிக்கும் பணிகள் 23 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த மற்றும் 232 வது பிரிகேட் தளபதி கேணல் ருவான் வனிகசூரிய ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் 12 வது தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் இப்பணி முன்னெடுக்கப்பட்டது