Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2021 15:19:04 Hours

593 வது பிரிகேட் புதிய ஆணையதிகாரமற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட் உணவறை திறப்பு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய, முல்லைத்தீவு, நயாறு 593 வது பிரிகேட்டின் புதிய ஆணையதிகாரமற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட் உணவறையினை திறந்து வைத்தார்.

முன்னாள் 593 வது பிரிகேட் தளபதியும் தற்போதைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் வசந்த பாலமகுபுர மற்றும் தற்போதுய 593 வது பிரிகேட்டின் தளபதியான கேணல் விஸ்வஜித் வித்யானந்த ஆகியோரின் அழைப்பின் பேரில் திறந்து வைத்தார்.

இந்த கட்டிடம் இராணுவ நிதியுடன் பொறியியல் சேவைப் படையணியின் படையினரால் பிரிகேட் படையினரின் மனித வள ஒத்துழைப்பில் கட்டப்பட்டது 59 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி.சூரியபண்டார , முல்லைத்தீவு முன்னரங்கு பிரதேச தளபதி பிரிகேடியர் அனில் இளங்கக்கோன், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி, பிரிகேட் தளபதிகள், 18 கெமுனு ஹேவா மற்றும் 16 வது பொறியில் சேவைப் படையணி கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட சில சில சிரேஸ்ட அதிகாரிகள் , மற்றும் சிப்பாய்கள் சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.