08th October 2021 15:00:04 Hours
இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவப் படைகளின் பங்களிப்புடன் அம்பாறை இராணுவப் பயிற்சிப் கல்லூரியில் நடைபெற்று வரும் இருதரப்புப் பயிற்சியான 'மித்ர சக்தி' கூட்டுப் பயிற்சிக்கான ஒத்திகைகள் வியாழக்கிழமை (7) அம்பாறை நகரின் மையத்தில் இடம்பெற்றன.
இந்திய இராணுவப் படையினர் இலங்கைக்கு வருகை தந்தன் பின்னர் 2021 அக்டோபர் 3 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்தப் பயிற்சிகளின் போது வீதித் தடைகள், ஆர்ப்பாட்டத்தை கலைத்தல், பதுங்கி தாக்குதல், நகர்ப்புற ரோந்துப் பயிற்சி என்பனவும் முன்னெடுக்கப்பட்டன.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் ஆசிர்வாதத்தோடு, 53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே “மித்ர சக்தி” கூட்டு பயிற்சிகளின் பணிப்பாளராக செயற்படுகிறார்.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி “மித்ர சக்தி” பயிற்சிகளின் போது இரு தரப்பு புரிதல்களை மேம்படுத்தும் விதமாகவும் முன்னெடுக்கப்படுவதோடு 120 இந்திய இராணுவ சிப்பாய்கள் பங்குபற்றுகின்ற அதேவேளை இலங்கை சார்பிலும் அதே எண்ணிக்கையிலான சிப்பாய்கள் பங்கேற்கின்றனர்.