07th October 2021 07:30:04 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் கீழுள்ள 241 வது பிரிகேட் சிப்பாய்களால் அக்கறைப்பற்று தொடக்கம் சின்ன முகத்துவாரம் வரையான கரையோர பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (3) முன்னெடுக்கப்பட்டன. 24 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஏசி லமாஹேவா மற்றும் 241 பிரிகேட் தளபதி கேணல் ஏஎம்சி அபேகோன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் சிப்பாய்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்கு பொது மக்களின் உதவியும் கிடைத்தது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி ஆகியோரின் பங்கேற்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.