03rd October 2021 15:17:42 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக நியமனம் வகித்து வெளியேறவிருக்கும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஒக்டோபர் 3 – 4 ஆம் திகதிகளில் சில படை முகாக்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இராணுவ சம்பிரதாயங்களுக்கமை கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஞாயிற்றுக்கிழமை (3) 11 வது படைப்பிரிவு மற்றும் 12 வது படைப்பிரிவுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது சிப்பாய்களுக்கு நிகழ்த்திய உரையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக நியமனம் வகித்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகளை தெரிவித்தார். அதனை தொடர்ந்து இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துக் கொண்டார். நிகழ்வில் 20 வது இலங்கை சிங்கப்படையணி சிப்பாய்களால் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
11 வது படைப்பிரிவு மற்றும் 12 வது படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் ஆகியோர் மேற்படி பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேஜர் ஜெனரல் விக்கும் லியகனகே அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியாக பதவியேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.