03rd October 2021 14:17:42 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 11 வது படைப்பிரிவின் கீழ் ரண்டெம்பே பயிற்சி நிலையத்தில் 2 வது ஆட்சேர்ப்பு பயிற்சி திட்டம் வியாழக்கிழமை (30) ஆரம்பமானது.
இராணுவ தளபதியின் முன்னகர்விற்கான மூலோபாய திட்டம் 2020- 2025' க்கு இணங்க 770 இளைஞர்கள் உள்ளீர்ப்பதற்கான பயிற்சி சில மாதங்களுக்கு தொடரவுள்ளது.
11 வது படைப்பிரிவு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் பயிற்சி கல்லூரியின் தளபதி, பயிற்றுவிப்பாளர்கள், சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு பிரதம அதிதியால் பயிற்சி பெறுவோரை நெறிப்படுத்தும் வகையிலான உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.