Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இத்தாலியில் இடம்பெற்ற 'உலக கிண்ணம் 2021' போட்டிகளில் இராணுவ சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர்களுக்கு வெற்றி

இலங்கை இராணுவத்தின் மூன்று மாற்றுத்திறனாளி வீரர்களான இலங்கை பீரங்கி படையின் சார்ஜண்ட் ஆர்ஏஎஸஎல் ரணவீர, சார்ஜண்ட் டிஎஸ்ஆர் தர்மசேன மற்றும் இலங்கை சக்கர நாற்காலி டென்னிஸ் சங்கத்தின் உறுப்பினரான கெமுனு ஹேவா படையணி சார்ஜண்ட் டிஎம் காமினி (மருத்துவ காரணங்களுக்காக ஓய்வு பெற்ற) இத்தாலியில் இடம்பெற்ற சக்கர நாற்காலி டென்னிஸ் உலக அணி கோப்பை 2021 போட்டிகளில் பெல்ஜியம் வீரர்களுக்கு (உலக தரவரிசை 8) எதிராக இரண்டு வெற்றிகளையும் பிரேசில் வீரர்களுக்கு (உலக தரவரிசை 7) எதிராக 3 வெற்றிகளையும் பதிவு செய்தனர்.

பெல்ஜியம் அணியை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்ட இலங்கை அணி பிரான்ஸ் அணியுடன் 3-0 என்ற புள்ளிகள் கணக்கிலும் இத்தாலியில் இடம்பெற்ற போட்டிகளில் பிரேசில் அணியுடன் 3-1 என்ற புள்ளிகள் கணக்கிலும் தோல்விகளை தழுவிக்கொண்டது. டோக்கியோ பாராலிம்பிக் வீரர் டிஎஸ்ஆர் தர்மசேனா தலைமையிலான இலங்கை முதன்மையான சக்கர நாற்காலி டென்னிஸ் அணி இத்தாலியின் சார்டினியாவில் நடைபெற்ற 16 வது உலக ஒற்றுமைக்கான போட்டியில் உலகின் முதல் பத்து அணிகளில் இரண்டு வைல்ட்கார்ட் சுற்றுகளுடன் நான்காம் இடத்திற்கு தகுதி பெற்றுகொண்டது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஆர்ஜென்டீனா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, கொரியா மற்றும் பிரேசில் ஆகியவை பத்து முதல் அணிகளாக பங்கேற்றிருந்ததுடன். மே மாதம் அணிகளுக்கான தகுதிகாண் கிண்ண போட்டிகளில் தகுதி நிகழ்வு நடைபெற்றபோது, இலங்கை காலிறுதியில் 3-0 என்ற அடிப்படையில் குரோஷியா வென்றது. இஸ்ரேல், கிரீஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டு இறுதி நான்கு இடங்களை பிடித்துகொண்டிருந்த நிலையில் அரையிறுதி போட்டியில் இஸ்ரேல் அணியினால் தோற்கடிக்கப்பட்டது.

சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகள் என்பது இலங்கை டென்னிஸ் சங்கத்தால் 2002 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியானது இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தலைவர் இக்பால் பின் இசாக், பொது செயலாளர் பிரதீப் குணசேகர, சக்கர நாற்காலி டென்னிஸ் சங்க பிரதி தலைவர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர ஆகியோரின் மேற்பார்வை மற்றும் பிரதான அனுசரணையாளர்களான கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையங்களின் ஊக்குவிப்பு காரணமாக மேற்படி போட்டிகளில் தரவரிசையில் உயர் இலக்கை அடைந்துகொள்ள முடிந்துள்ளது.