Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2021 18:00:46 Hours

இராணுவ வைத்திய குழுவினரால் முல்லைத்தீவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 வது மாத்திரை தடுப்பூசி வழங்கல்

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 68 வது படைபிரிவின் படையினர், புதுக்குடியிருப்பில் உள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து, செப்டெம்பர் 29 ம் திகதி நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு 2 வது மாத்திரையினை வழங்கினர்.

இராணுவ வைத்திய அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுகாதார பிரிவு அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம் முதியவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய ஆகியோரால் 68 வது படைப்பிரிவின் வழங்கப்பட்ட தளபதிக்கு வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.