01st October 2021 17:50:46 Hours
இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபயின் வழிகாட்டலுக்கிணங்க, கவச வாகனப் படையணியின் சிரேஸ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகளுக்கான தலைமையத்துவ பயிற்சி பட்டரை இலங்கை கவச வாகன படையணி பயிற்சி நிலையத்தில் 2021 செப்டம்பர் 27-28 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
சிரேஸ்ட பயிற்றுவிப்பாளர் அதிகார ஆணையற்ற அதிகாரி (ஓய்வு) ஐகேஆர்ஏ செனவிரத்ன மற்றும் அதிகார ஆணையற்ற அதிகாரி I (ஓய்வு) வடுகே பிரியந்த, ஆகியோரால் பயிற்சி பட்டறையில் ஒழுக்கம், நன்நடத்தை, ஆளுமை மற்றும் மனித வள முகாமைத்துவம் தொடர்பிலான விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. அதனையடுத்தி பிரிகேடியர் ரஞ்சன் விஜேதாச அவர்களால் சிரேஸ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் டைனர்ஸ் கிளப் பயிற்சிகளை நடத்தினார். இப்பயிற்சியில் 98 சிரேஸ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகள் பங்குபற்றினர்.
இலங்கை இராணுவ அதிகாரிகள் தொழிலாண்மை மேம்பாட்டு மையத்தின் தளபதியும் இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட, கவச வாகனப் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ், ஆகியோரால் தொழில் தரத்தை மேம்படுத்துவதற்கான மேற்படி பயிற்சிகளின் நோக்கம் தொடர்பிலும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளது தொடர்பிலும் விரிவுரைகளை நடத்தினர்.