01st October 2021 18:30:08 Hours
சர்வதே சிறுவர் தினமான வெள்ளிக்கிழமை (01) மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிப்பாய்களால் பண்டாரவளை அம்பேகொட “சிரிசங்கபோ” சிறுவர் இல்லத்தில் உள்ள சிறார்களுக்களுக்கு பீசா விருந்துபசாரம், மரக்கறி வகைகள், சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள், முகக் கவசங்கள் என்பன அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இத்திட்டம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டலுடன், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரியினால் ஒருங்கிணைக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கிணங்க திட்டத்திற்கான நிதி உதவி பண்டாரவளை பிசா ஹட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.