Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2021 18:15:08 Hours

நன்றிக்கடனுக்காக அவசர சிகிச்சை பிரிவுக்கு 5 சத்திரசிகிச்சை கட்டில்கள் வழங்கி வைப்பு

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் தமக்கி கிடைக்கப்பெற்ற அக்கறையான கவனிப்புக்கு நன்றிக்கடனாக ஓய்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரியான லெப்டினன் கேணல் (வைத்தியர் எஸ்ஆர் பதிராஜ அவர்கள் அவரது பாரியாரான திருமதி சீ பதிராஜ அவர்களுடன் இணைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு நன்றிக்கடனுக்காக 550,000.00 ரூபா பெறுமதியான 5 சத்திரசிகிச்சை கட்டில்களை வழங்கி வைத்தார்.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் மயக்கவியல் மருத்துவ நிபுணர் கேணல் (வைத்தியர்) சாமிக்க அபேசிங்க மற்றும் மேஜர் (வைத்தியர்) கவிதா பத்திராஜ ஆகியோரிடம் லெப்டினண் கேணல் எஸ்ஆர் பதிராஜ அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.