01st October 2021 16:00:29 Hours
சிறப்பு படையணி சிப்பாய்களின் ஏற்பாட்டில் அண்மையில் நாவுல பகுதியில் வசிக்கும் 29 தமிழ் குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு படையணியின் வேண்டுகோளுக்கமைய மேற்படி திட்டத்திற்கான நிதி உதவிகள் திரு லஹிரு அபேவிக்கிரம அவர்களால் வழங்கப்பட்டிருந்ததோடு, தலா 7500.00 ரூபா பெறுமதியான 29 நிவாரண பொதிகளிலும் அரிசி, பருப்பு, மா, சீனி, பொதி செய்யப்பட்ட உணவுகள், மிளகாய் மற்றும் ஏனைய நிவாரண பொருட்கள் பலவும் அடங்கியிருந்தன. அப்பகுதி கிராம சேவகரின் உதவியுடன் படையினரால் மேற்படி நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
சிறப்பு படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி, அதிகாரிகள், சிப்பாய்கள், நன்கொடையாளர், பயனாளி குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கேற்புடனும் படைமுகாம் வளாகத்தை அண்மித்து வசிப்போருக்கு மேற்படி நன்கொடை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.