01st October 2021 17:30:29 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாகவிருந்து வெளியேறவிருக்கும் மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்கள் செவ்வாய்க்கிழமை (28) மன்னாரில் உள்ள 54 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில் மாலபே SLIT நிறுவனத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுவினால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் மற்றும் மன்னாரில் உள்ள ஏனைய தேவையுள்ள குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
54 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த போது வன்னி பாதுகாப்பு படைத் தலைமைக தளபதிக்கு 54 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதோடு 54 வது படைப்பிரிவு தலைமையகத்தின் நுழைவு வளாகத்தில் 10வது (தொ) கெமுனு ஹேவா படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை பெற்ற முன்னாள் போராளிகளுக்கு மேற்படி நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகரவின் ஒருங்கிணைப்பில் 541 வது பிரிகேட் தளபதி கேணல் அஜித் அபேவர்தன அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்படி திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார தனது அலுவலகத்தின் நிர்வாக செயல்பாடுகளை கடமைகளை நிறைவேற்றும் போது ஒத்துழைப்பு வழங்கிய 54 வது படைப்பிரிவு தலைமையகத்தின் சகலருக்கும் நன்றி தெரிவித்தார். பிரிகேட் தளபதிகளும் கட்டளை அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடித்து கலந்து கொண்டனர்.