01st October 2021 14:24:12 Hours
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவிய பிணவறை பற்றாக்குறையைடுத்து அதற்கான அவசர தேவையை கருத்தில் கொண்டு கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி சிப்பாய்களால் 20 அடி இரும்பு கொள்கலன் ஒன்று பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இந் நடவடிக்கைகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் ஆசிர்வாதத்துடன் கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளின் தளபதியின் வழிகாட்டலுடன் இடம்பெற்றன.
பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன் மற்றும் சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆர் தனுஷன் அவர்களினால் கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எம்.எச்.என். ஹேரத் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க குறித்த பிணவரை அமைக்கப்பட்டது.
7 வது இலங்கை இயந்திரவியல் மின்சார பொறியியல் படையணியின் சிப்பாய்களால் முன்னுரிமை அடிப்படையில் 11 சடலங்களை சேமிக்க கூடிய வகையில் கொள்கலன்களை பிணவறைகளாக மாற்றியமைத்தனர்.