Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd October 2021 22:46:53 Hours

இறுதி கட்ட கள பயிற்சி நடவடிக்கையின் போது கும்புறுபிட்டி பிரதேசம் சிறு போர்க்களமாக மாறியது

திருகோணமலை கும்புறுபிட்டி பகுதியில் இடம்பெற்ற முப்படையினரின் இறுதிக்கப்பட்ட கள பயிற்சிகளுக்காக அனுமான அடிப்படையிலான படை முகாம்களை இலக்கு வைத்து நீர்க்கள வாகனங்களுடன் நடத்தப்பட்ட தாக்குதல் பயிற்சிகள் இன்று (29) பிற்பகல் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, பங்களாபதேஷ மற்றும் மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள், முப்படையின் சிரேஸ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றன.

இதன்போது பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்ட கிராமமொன்றில் பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் கைக்குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகளை போர்க்கள அனுபவத்துடன் கடற்படை சிப்பாய்கள், விமானப்படை சிப்பாய்கள், இராணுவத்தின் இயந்திரவியல் காலாட் படை, கொமாண்டோ மற்றும் சிறப்பு படை சிப்பாய்களால் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

தொடர்ச்சியான 11 வது ஆண்டாகவும் இடம்பெற்று வரும் , பன்னாட்டு இராணுவ கள பயிற்சிப் செயற்பாடுகள் சிறப்பு தாக்குதல் படைகளை உருவாக்கி அவர்களின் செயற்பாட்டு திறன் மற்றும் பங்கேற்கும் படையினரின் போர் திறன்களை பராமரிப்பதை நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. மேற்படி பயிற்சியில் இயந்திர காலாட் படை, கடற்படை, விமானப் படை, கொமாண்டோக்கள், சிறப்பு படை ஆகியவற்றின் 2486 சிப்பாய்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தின் கௌரவத்தை பிரதிபலிக்கும் வகையில் 3 செப்டம்பர் 2021 மின்னேரியாவில் உரிய சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்ட மேற்படி பயிற்சி நடவடிக்கைகளில் , 05 நாடுகளை பிரதிநிதுவப்படுத்தி 37 வெளிநாட்டு படையினர் கலந்துகொண்டிருந்தனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் ஓமான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த FTX பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்றனர். குறித்த பயிற்சிகளின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, பிரதி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அனில் சமரசிங்க ஆகியோரின் தலைமையில் 3 செப்டம்பர் 2021 அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 3 முதல் இராணுவ சிப்பாய்களின் பங்களிப்பு கள பயிற்சி நடவடிக்கைகளுக்கு கிடைக்கப்பெற்றன.

ஒரு குழுவில் கொமாண்டோ மற்றும் சிறப்பு படைகளின் 12 திறன்மிக்க களப் போராளிகள், மிக அத்தியாவசியமான நேரங்களில் சூட்சுமமாக செயற்படுவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட நான்கு போராளிகள் பங்கேற்புடன் இடம்பெற்ற இப் பயிற்சிகளின் போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்த போது விமானப்படை மற்றும் கடற்படையினரின் ஆதரவுடன் செவிப்புலன்களை மௌனிக்க செய்யகூடிய வகையில் குண்டுகள் வெடிக்கச் செய்யப்ட்டு போர்கள சூழல் உருவாக்கப்பட்டது.

அனைத்து பகுதிகளிலிருந்தும் தற்காலிக அனுமான களத்தில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக, கடற்படையின் வளங்களை பயன்படுத்தி ரோந்து நடவடிக்களைப் சிறப்புப் படைகளின் வீரர்களால் கடல்சார் நடவடிக்கைகள், சிறப்பு படைகளின் உயர் திறமையான பாராசூட் நடவடிக்கைகள், கிளர்ச்சியாளர்கள் வலுவடைவதை தடுக்கும் நோக்கில் இயந்திரவியற் காலாட் படையினரின் யுத்த தாங்கிகளுடனான நடவடிக்கைகள், எதிரிகளின் பாதுகாப்பு அரண்களை அளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளின் பின்னர் விமான படையின் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது நிலம், கடல், காற்றோடு போராடி எதிரிகளின் மறைவிடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துதல் கிடைக்கப்பெற்ற தகவலொன்றை அடிப்படையாக கொண்டு துரிதச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் பலதரப்பு கூட்டு செயற்பாடுகள் என்பவற்றை பிரதிபலிப்பதாகவும் இப்பயிற்சிகள் அமைந்திருந்தன.

"இலங்கை இராணுவம் மிகவும் ஒழுக்கமான மற்றும் பயிற்சி பெற்ற அமைப்புகளில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளதோடு நாடு எதிர்கொள்ளும் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய சிறந்த அமைப்பாக உள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் உள்ள ரகசியம் அதன் கடமை சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்கமான பயிற்சி முறைமைகளாகும். கட்டமைப்பு, கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றில் தொடர்ச்சியாக பின்பற்றப்படும் ஒழுங்குமுறைகள் மூலம் தேசிய உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூக நலன் மற்றும் அனர்த்தங்களின் போதான விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான இராணுவத்தின் உறுதியான அர்ப்பணிப்பு, வழிகாட்டல்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். உதாரணமாக, 'ஹர்மட்டன்', 'கர்மரண்ட் ஸ்ட்ரைக்', 'மித்ரசக்தி', 'ஷேக் ஹேண்ட்ஸ்' போன்ற FTX களப் பயிற்சிகளின் போது அனர்த்த முகாமைத்துவ அமங்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றமையும் சிறப்பம்சமாகும். இப்பயிற்சிகளை வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விறுவிறுப்பாக நடத்தியமைக்காக பயிற்சி நிகழ்வுகளின் பிரதம விருந்தினராக பங்கேற்ற பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா படையினருக்கு நன்றிகளை கூறிக்கொண்டார். மேலும் தளபதி தனது உரையின் போது மேற்படி பயிற்சிகளின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த பயிற்சி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக உயர்ஸ்தானிகர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள், இராணுவ தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, விமானப்படை பதவி நிலை பிரதானி ஏயார் வைஸ் மார்ஷல் எம்டீஏபி பாயோ, இராணுவ தலைமையகத்தின் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சேனா வடுகே, விமானப்படை கள நடவடிக்கைகளுக்கான தளபதி எயார் வைஸ் மார்ஷல் ஏ.ஜே.அமரசிங்க, பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகள் மற்றும் அதிகாரிகள், சிப்பாய்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.