Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th September 2021 16:01:51 Hours

மூதூர் நடுத்தீவு குளத்தின் சதுப்பு நிலப்பகுதியில் படையினரால் 200 சதுப்புநிலக் கன்றுகள் நடுகை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது படைப்பிரிவின் 223 வது பிரிகேடின் 15 வது இலங்கை இலேசாயுத காலாட்படை சிப்பாய்களால் சனிக்கிழமை (25) மூதூர் நடுத்தீவு குளத்தை சூழவுள்ள சதுப்பு நிலப்பரப்பில் 200 சதுப்பு நில கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

மூதூர் கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கடற்கரை வள முகாமைத்துவ திணைக்கள காரியாலயம் என்பவற்றுடன் இணைந்து 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படை சிப்பாய்களால் இத்திட்டம் சூழல் பாதுகாப்பை கருத்திற் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கரையோர பாதுகாப்பு திணைக்கள காரியாலயத்தின் சிரேஷ்ட அதிகாரி திரு அருண கமகே, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்.ராஜகுரு, 15 வது இலேசாயுத காலாட் படையின் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் என். கடதார மற்றும் பொது மக்கள் சிலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.