Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th September 2021 15:54:36 Hours

படையினரின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் உதவிகளுடன் கிழக்கிலுள்ள விகாரைகள் புனரமைப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜேசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 22,23,24 வது படைப்பிரிவுகளில் அமைந்துள்ள திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் கவனிப்பார் அற்ற நிலையில் காணப்பட்ட விகாரைகளை புனர் நிர்மாணம் செய்வதற்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் படையினரால் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் மேற்படி விடயங்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைந்து பதிலளிக்கும் விதமாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் முன்னுரிமை அடிப்டையில் தெரிவு செய்யப்பட்ட விகாரைகளுக்கு இத்தகைய உதவிகள் வழங்கப்பட்டன.

அதன்படி, பச்சனூர் புராதன கொட்டியாராம ரஜமகா விகாரை, லுனுகல ரஜமகா விகாரை , லங்காராம ரஜமகா விகாரை, கோமரன்கடவல சமுத்திரகிரி, பிச்சமாலே ரஜமகா விகாரை மற்றும் குச்சவேலியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கிரிஹந்துசேய ஆகிய விகாரைகளை புனரமைத்தல், கட்டுமானங்கள் மற்றும் பழுதுபார்ப்பு ஆகிய பணிகள் 22 வது படைப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு 23 வது படைப்பிரிவின் கட்டுப்பாட்டு பகுதியில், உள்ள திம்புலாகல ஸ்ரீ சுகதாராம விகாரை, பக்கமூன ஸ்ரீ சைலாபிராம விகாரை, கல்லேல்ல அக்ரபோதி ஸ்ரீ விகாரை, சோமவதிய ஸ்ரீ சாந்தி நிகேதனாராமய, கிரிதலை உனகல வெஹெர ரஜமகா விகாரை, மைலங்குருச்சி ரஜமகா விகாரை மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் புலத்திசிகம ஸ்ரீ பெரகும் பிரிவெனா ஆகிய விகாரைகளின் கட்டுமான மற்றும் புனரமைப்பு , பழுதுபார்க்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 24 வது படைப்பிரிவு சிப்பாய்கள் அம்பாறை அரந்தலாவ விகாரை, பொலவத்த ஸ்ரீ ஓவகிரி ஜயமஹா விகாரை, ஹிங்குரான உத்தர ஜயமஹா விகாரை, அம்பாறை புராதன தீகவாபிய ரஜமகா விகாரை, லஹுகல கொடவெஹெர தீகதலாக விகாரை மற்றும் அம்பாறை வித்தியானந்த பிரிவென ஆகிய விகாரைகளில் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் இராணுவ ஒத்துழைப்புக்காக முன்னெடுக்கப்பட்ட மேற்படி கட்டுமான திட்டங்கள் உரிய படையலகுகளின் கட்டளை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டன.