Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

26th September 2021 10:39:01 Hours

இலங்கை மின்சார பொறியியல் பணிப்பக பணிப்பாளர் உத்தியோக பூர்வ விஜயம்

இலங்கை மின்சார பொறியியல் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக நியமனம் பெற்றுக்கொண்டுள்ள பிரிகேடியர் டீபி.ஹத்துருசிங்க வியாழக்கிழமை (23) 4 வது இலங்கை இராணுவ மின்சார பொறியியல் படையணியின் கீழ் செயற்படும் இலங்கை இராணுவ மின்சார பொறியியல் படையணியின் வேலைத்தளத்திற்கு உத்தியேபகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் அடையாளமாக மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த அவர் வேலைத்தளத்தின் செயல்பாட்டு அம்சங்கள் தொடர்பில் விரிவாக அறிந்துகொள்ளும் நோக்கில் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றை நடத்திய பின்னர் வாகன பழுதுபார்க்கும் செயல்முறைகளை மேற்பார்வை செய்தார்.

இவ்விஜயத்தின் போதான நிகழ்வுகளில் இராணுவ தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும், சிப்பாய்களும் உரிய சுகாதார வழிகாட்டல்களையும் கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.