Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2021 08:15:35 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அனர்த்த முகாமைத்துவ திட்டங்கள் தொடர்பாக ஆராய்வு

எதிர்பார்க்கப்படும் மோசமான வானிலையை கருத்திற் கொண்டு அவசர அனர்த்த முகாமைத்துவ ஏற்பாடுகளை மதிப்பிடுவதற்கான அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பொறுப்பு அதிகாரிகளுடனான சந்திப்பு வியாழக்கிழமை (23) கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலம் மற்றும் அனர்த்தம் மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தொடர்புடைய பொறுப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பிராந்திய அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அனர்த்த தடுப்பு செயல்முறையைத் தூண்டுவதன் முக்கியத்துவம் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதே சமயம், சுற்றுச்சூழலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மணல் அகழ்வு, மரம் வெட்டுதல் போன்ற சட்டவிரோத செயல்களைப் பிடிப்பதற்கான வழிமுறைகளையும் மதிப்பீடு செய்தனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் பிரிகேடியர் பொதுப் பணி, 22 மற்றும் 24 வது படைப்பிரிவுகளின் கேணல் பொதுப் பணி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் உதவி பணிப்பாளர்கள் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகம் பணிநிலை அதிகாரிகள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.