22nd September 2021 15:00:24 Hours
கம்பொளை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் நடாத்திய சர்வதேச தேடல் மற்றும் ஆலோசனைக் குழு' (INSARAG) பயிற்சியாளர்களுக்கான பயிற்சி பாடநெறியின் நிறைவு நாள் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை (17) ஸும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இடம்பெற்றது.
2021 செப்டம்பர் மாதம் 13 திகதி முதல் 2021 செப்டம்பர் மாதம் 17 வரை இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மையத்தின் (SLACDRT) தளபதி கேணல் அனில் சோமவீரவின் மேற்பார்வையில் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் (DMC) இணைந்து வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பாடநெறியில் இராணுவம் (20), கடற்படை (05), விமானப்படை ( 05), பொலிஸ் அதிரடிப் படை STF (05) மற்றும் தீயணைப்பு படையினர் (05) என பங்குபற்றினர்.
ஸும் தொழில்நுட்பத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க தொடக்க உரையுடன் நிறைவு விழாவின் நடவடிக்கைகள் தொடங்கின. அனர்த்த நிவாரணத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பயிற்றுவிப்பாளர்கள்,பிற அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துதல் மற்றும் பகிர்ந்துகொள்வதற்கான முக்கிய நோக்கத்துடன் பாடநெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மையத்தினால் SLACDRT தொடங்கப்பட்ட பாடநெறியின் இறுதிப் பயிற்சி கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற சில மணி நேரங்களுக்கு பின்பு பரிசளிப்பு விழா தொடங்கியது. ஒருங்கிணைப்பு பயிற்சியில் நிலச்சரிவு மீட்பு செயல்பாடு மற்றும் மண்சரிவில் தேடல் மற்றும் மீட்பு (சிஎஸ்எஸ்ஆர்) செயல்பாடுகள் மற்றும் நடைமுறை அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் பயிற்சியாளர்கள் தனது திறமையை திறம்பட நிரூபித்தனர்.
சர்வதேச தேடல் மற்றும் ஆலோசனைக் குழு' INSARAG என்பது பேரழிவுகள் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகள் மற்றும் அமைப்புகள் ஆகும், இது நகர்ப்புற தேடல் மற்றும் மீட்பு (USAR) செயல்பாட்டு ஒருங்கிணைப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நகர்ப்புற தேடல் மற்றும் மீட்பு (யுஎஸ்ஏஆர்) குழுக்களுக்கான தரநிலைகள் , வகைப்படுத்தல் மற்றும் நிலநடுக்கங்கள் மற்றும் மணசரிவு பேரழிவுகளுக்குப் பிறகு சர்வதேச மீட்பு ஒருங்கிணைப்புக்கான வழிமுறைகளை நிறுவுவதே இதன் நோக்கமாகும்.
உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான தேசிய திட்ட அதிகாரி வைத்தியர் சபுமல் தனபால மற்றும் சர்வதேச தேடல் மற்றும் ஆலோசனைக் குழுவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய செயலாளர் திருமதி ஹருகா எசாகி நிறைவு அமர்வில் ஸும் தொழில்நுட்பம் மூலம் கலந்து கொண்டு தங்கள் நிபுணத்துவ கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மனித வள முகாமையாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அதீப திலகரத்ன, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயல்பாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த உபேசிரிவர்த்தன, இலங்கைக்கான பணிப்பாளர் A- PAD குறூப் கெப்டன் (ஓய்வ) பிர்ஸான் ஹாஷிம், இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மையத்தின் (SLACDRT) தளபதி கேணல் அனில் சோமவீர, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி செயல்பாட்டு பணிப்பாளர் திரு ஹிரான் திலகரத்ன , இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மையத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் பங்கேற்பாளர்கள் கொவிட் – 19 தொற்றுநோய் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றினர் பங்குபற்றினர்.