Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2021 15:15:35 Hours

முல்லைத்தீவில் 45 வது தமிழ் மொழி பாடநெறி நிறைவு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதிகார எல்லைகளில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் 45 வது தமிழ் மொழி பாடநெறி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதுடன் சான்றிதழ் வழங்கும் விழா கடந்த புதன்கிழமை (15) 59 வது படைபிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.

2021 ஜூலை மாதம் 07ம் திகதி தொடக்கம் 2021 செப்டம்பர் 15ம் வரை நடைப்பெற்ற பாடநெறியில் முல்லைத்தீவு பகுதியில் பணிபுரியும் 20 இராணுவ வீரர்கள் பங்கு கொண்டனர். சான்றிதழ் வழங்கும் விழாவில் 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி. சூரியபண்டார பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் பாட நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன் அவர்களுக்கான உரையினை ஒன்றினையும் ஆற்றினார்.

593 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பாலமகும்புர, 59 வது படைபிரிவு தலைமையகத்தின் சிரேஸ்ட பணிநிலை அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.