Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

16th September 2021 21:00:32 Hours

3 மற்றும் 4 வது விஷேட படை சிப்பாய்களால் கிழக்காசிய விடுதலை போராளிகளுக்கு எதிரான பயங்கரவாத தடுப்பு பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுப்பு

கொழும்பின் வடக்கே அமைந்துள்ள ஒரு கிலோ மீற்றர் நீளமான திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (16) காலை 4 சிறப்பு படைகளின் செயற்பாட்டு அடிப்படையிலான தெற்காசியாவின் மிகப்பெரிய போர்க்களமாகவும், போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மற்றும் நிதி சுத்திகரிப்பில் ஈடுபடுவோரின் களமாக மாறியிருந்தது. ஆயுதமேந்திய கிழக்காசிய விடுதலை போராளிகளும் அங்கு மறைந்திருந்த நிலையில் அவர்களின் இருப்பிடங்களை நோக்கி “கொமரண்ட ஸ்ட்ரைக்” படைகள் போரிட்டனர்.

இப்பயிற்சிகளின் போது துறைமுகத்துக்குள் நுழைந்த புகழ்பெற்ற மற்றும் சர்வதேச அளவில் தொடர்புகளை பேணிவரும் பயங்கரவாதத் குழுவின் தலைவர், 'சார்லஸ் லூகாஸ்' என்ற புனைப்பெயரில் ஏனைய மீன்பிடி படகுகளுக்குள் பதுங்கியிருந்தவர்கள் கிழக்காசிய விடுதலை போராளிகள் என்றும் இனங்காணப்பட்டனர். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் போன்ற கிழக்காசிய படைகளின் அந்நிய செலாவணியை நிலைக் குலைக்கும் பொறுப்பையும் உளவுத்துறை பொறுப்பாளராகவும் செயற்படுகின்றனர்.

அதற்கமைய பயங்கரவாத குழுக்களை உயிருடன் அல்லது சடலமாக மடக்கிப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் 4 வது விஷேட படையின் தளபதி கேணல் சஞ்சீவ ஹொராவலவிதானவின் மேற்பார்வையின் கீழ் வியாழக்கிழமை (16) இடம்பெற்றன. இதன்போது சந்தேகத்திற்கிடமான படகொன்றும் மீன்பிடி துறைமுகத்திற்குள் நடமாடியமையும் அதற்குள் இருந்த குற்றவாளி ஒருவரை சூழ அவனது பாதுகாலர்கள் ஆயுதம் ஏந்நிக்கொண்டிருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து சுமார் 2 மணிநேர நடவடிக்கையின் பின்னர் பயங்கரவாத குழுவின் தலைவன் படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு, அவர்கள் வசமிருந் டி – 56 துப்பாக்கிகள், தானியங்கி துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கைகுண்டுகள் மற்றும் வெடிப் பொருட்களுடன் கும்பலை சேர்ந்தவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.

அதே வேளை செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை 3 வது சிறப்பு படையினரால் மத்திய மாகாணத்தின் மீமுரேயில் பயங்கரவாத கும்பலுடன் மேற்கொண்ட மோதலில் கிழக்காசிய விடுதலை போராட்ட குழுக்களின் தலைவர்களுள் ஒருவரான 'ஜோர்ஜ் மெரில் குமரன்' படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததுடன் கைப்பற்றபட்ட கிழக்காசிய விடுதலை போராட்ட குழுவின் முகாம், கட்டளை பிரிவுகள், தகவல் தொடர்பாடல் கட்டமைப்புக்கள் வசதிகள், கணினிகள், என்பவற்றுடன் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை படையினரால் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்திய மாகாணத்தில் சிவில் உடையிலிருக்கும் பயங்கரவாத குழுவொன்று மலையகத்தில் வன்முறைச் செயற்பாடுகளை தூண்டும் நோக்கில் செயற்படுவதற்கான வலையமைப்பொன்றை பேணி வந்துள்ளமையும் அறியப்பட்டது. மீமுரேயானது கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதோடு அப்பகுயில் லக்கல பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் பாதைகளும் உள்ளமை சிறப்பம்சமாகும். மீமுரேயில் முன்னெடுக்கப்பட்ட துணிச்சலான பயிற்சி நடவடிக்கைகள் பயிற்சியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, பயிற்சியின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் அனில் சமரசிரி, “கொமரண்ட் ஸ்ட்ரைக்” பயிற்சி நடவடிக்கைகளின் ஆலோசகர் பிரிகேடியர் சங்க ஜயமஹா ஆகியோரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன.

பயிற்சி கொமரண்ட் ஸ்ட்ரைக் XI -2021' விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையினை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, பயிற்சியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க உட்பட பல சிரேஸ்ட அதிகாரிகள் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இராணுவ தலைமையத்திலுள்ள நடவடிக்கை ஒருங்கிணைப்பு அறையிலிருந்து 4 வது கொமாண்டோ படையணி சிப்பாய்களால் கொழும்பு மீன்பிடித்துறைமுகத்தில் கிழக்காசிய விடுதலைப் போராளிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த கொண்ட கொங்கோடிய மீன்பிடித்துறை மற்றும் துறைமுகங்கள் அமைச்சரை மீட்கும் பயிற்சி நடவடிக்கையினை அவதானித்தனர்.