Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2021 12:06:32 Hours

இராணுவ தளபதிக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

இலங்கை மற்றும் அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பான “மிசூரி சேர்பப்பிளஸ் யுனைடட்” மற்றும் அமெரிக்க கலிபோனிய தம்ம விகாரை ஆகியன இணைந்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அன்பளிப்புச் செய்திருந்த மருத்துவ உபகரணஙகள் மற்றும் பாகங்கள் என்பன ஹொரன மற்றும் மத்துகம வைத்தியசாலைகளுக்கு சில தினங்களுக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டன.

கொவிட் – 19 நோயால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நோயாளிகளின் சிகிச்சைக்கு அவசியமான வடிகட்டி, பரிசோதனை குழாய் என்பன மாவட்ட வைத்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வழங்கப்பட்டன. இலங்கை இராணுவ முன்னோடி படையின் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் ஐடிடி பெர்ணான்டோ மற்றும் முதலாவது இலங்கை இராணுவ முன்னோடி படையணியின் கட்டளை அதிகாரி யூஎம்பி உடுக்கும்புர ஆகியோரால் ஹொரன மற்றும் மத்துகம வைத்தியசாலைகளுக்கும் மேற்படி பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.