Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th September 2021 16:30:11 Hours

இராணுவ தினத்தன்று திறப்பதற்காக மடு பகுதியின் இரு குடும்பங்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் சமூக நல திட்டத்திற்கமைய 653 வது பிரிகேடின் 24 கஜபா படையணி சிப்பாய்களால் சின்னபண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் வீடற்ற இரு குடும்பங்களுக்கான புதிய வீடிகளை நிர்மாணித்து கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேற்படி குடும்பங்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு 653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகா அவர்களின் முயற்சியில் 65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப்பணிகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டன. இதற்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவிகள் மடு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டன.

இரண்டாவது வீட்டின் கட்டுமானம் செப்டம்பர் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு, வீட்டின் நிர்மாண பணிகளை சில வாரங்களுக்குள் நிறைவு செய்ய முன்வந்திருந்தனர். இவ்வீட்டின் 80 சதவீதமான நிர்மாண பணிகள் 11 செப்டம்பர் 2021 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்பட்டிருந்ததோடு, அதே தினமான 11 செப்டம்பர் 2021 திகதியன்று இரண்டு வீடுகளினதும் நிர்மாண பணிகளை மதிப்பீடு செய்வதற்கான விஜயமொன்றை 24 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் 65 வது படைப்பிரிவு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், 653 பிரிகேட் மற்றும் 24 வது கஜபா படையணி ஆகிய தரப்புக்களின் ஒருங்கிணைப்பினால் மேற்கொள்ளப்பட்டதோடு, இதற்கான நிதி உதவிகள் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்தன. குறித்த வீடுகள் இரண்டும் 72 வது இராணுவ தினமான 10 அக்டோபர் 2021 அன்று பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.