Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th September 2021 08:00:36 Hours

அரசபுரக்குளம் பட்டாலியன் பயிற்சி பாடசாலையின் 478 பயிற்சியாளர்கள் படைப்பிரிவுகளுக்கு விடுவிப்பு

இராணுவ தளபதியின் “முன்நகர்வுககான மூலோபாய திட்டமிடல் 2020-2025” க்கு அமைவான மற்றுமொரு கட்டமாக இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 66 வது படைப்பிரிவு பிரதேசத்தில் உள்ள பூநகரி அரசபுரகுளம் பயிற்சிப் பாடசாலையில் தங்களது பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 478 பயிற்சியாளர்களின் வெளியேற்ற நிகழ்வு சனிக்கிழமை (04) இடம்பெற்றது.

66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க அவர்களின் மேற்பார்வையில் கொவிட் - 19 சுகாதார ஒழுங்கு விதிகளை மிக தீர்க்கமாக கடைப்பிடித்து இந்த பயிற்சியானது 2021 ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

பட்டாலியன்கள் பயிற்சி பாடசாலையின் மேற்படி நிறைவு விழா நிகழ்வின் சிறப்பு விருந்தினராக லெப்டினன் கேணல் எம்பீஜே முத்துநாயக்க கலந்துகொண்டார். பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கை இராணுவ பொலிஸ் படையின் பயிலுனர் டபிள்யூஜீஎஸ் விஜேசூரிய சிறந்த பயிலுனராகவும், கெமுனு ஹேவா படையின் பயிலுனர் ஜேஎன்எஸ்ஜேஎன்பீ வஸ்கடுவ சிற்த உடற்கட்டமைப்புக்கும், இலங்கை இராணுவ காலாட் படையின் பயிலுனர் எச்ஆர்எஸ் தசநாயக்க சிறந்த துப்பாகிச்சுடும் சிப்பாயாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்ச்சி பெற்ற பயிலுனர் சிப்பாய்கள் அந்தந்த இலங்கை இராணுவ போர்க் கருவிகள் படை, இலங்கை பீரங்கி படை, இலங்கை இராணுவ சமிக்ஞை படை, இலங்கை இலேசாயுத காலாட்படை, இலங்கை சிங்கப் படையணி, கெமுனு ஹேவா படை, கஜபா படையணி, விஜயபா காலாட்படையணி,. பொறியியல் காலாட்படை படை, இராணுவ புலனாய்வுப் படை, இலங்கை இராணுவப் பொலிஸ் படை மற்றும் இலங்கை இராணுவ ரைபில்(துப்பாக்கி) படை ஆகியவற்றில் இணைக்கப்பட்டனர்.