Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2021 12:30:09 Hours

வவுனியா மாவட்ட சுகாதார நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு

வவுனியா மாவட்ட கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் வவுனியா மாவட்ட சுகாதா சேவைகள் பணிப்பாளர் திரு பீஏ சரத்சந்திர, மாவட்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்பில் வவுனியா மாவட்ட கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் தொடர்பிலான மீளாய்வு கூட்டம் திங்கட்கிழமை (13) வவுனியா மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.

பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளின் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, மாவட்டத்தில் நடைமுறையிலிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் சுகாதார அணுகுமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததோடு, வன்னி பாதுகாப்பு படைகளின் செயற்பாடுகள் மற்றும் அநாவசியமான நடமாட்டங்களை கட்டுப்படுத்துதல் என்பன தொடர்பிலும் எடுத்துரைத்தார்.