Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2021 12:00:09 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் கும்புக்கன மற்றும் வெலிமடையில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள்

மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன தெகலராப மலை மற்றும் கும்புக்கன தெகலராபவில் உள்ள மஹாகொடயாய வனப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (12) ஏற்பட்ட தீப்பரவல் குறித்து அவசர அழைப்பு பிரிவினரிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்ற மாத்திரத்திலேயே விரைந்து பதில் நடவடிக்கை மேற்கொண்ட 121 வது பிரிகேட் சிப்பாய்களால் தீப்பரவல் கட்டுப்பாடிற்குள் கொண்டு வரப்பட்டது.

12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் வழிகாட்டலுக்கமைய 121 வது பிரிகேட் தளபதி தலைமையில் மேற்படி காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதே தினத்தின் (12) வெலிடம, பஹலகம கொடவர, ரோஹல் கந்த மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பாக அப்பகுதி பொதுமகள்ள அறிவுறுத்தியதை தொடர்ந்து சில மணி நேரங்களுக்குள் அப்பகுதியை சென்றடைந்த 112 வது பிரிகேட் சிப்பாய்களினால் தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. மேற்படி நடவடிக்கை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது.