Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2021 20:00:26 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் தளபதிக்கு பொறியியல் படையினரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு

முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதியும் பொறியியல் சேவை படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரத்னசிறி கணேகொட அவர்கள் 34 வருடத்திற்கும் மேலாக இராணுவத்தில் சிறப்பாக சேவையாற்றி ஓய்வுபெற்றுச் செல்வதையிட்டு, பனாகொடையிலுள்ள பொறியியல் சேவைப் படையின் தலைமையகத்தில் வௌ்ளிக்கிழமை (10) அவருக்கான பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் போது பொறியியல் சேவை படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் கிதுல்கொட அவர்களினால் ஓய்வு பெறும் தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் படைப்பிரிவு வளாகத்திலுள்ள போர் வீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போரில் உயிர் நீத்த பொறியியல் சேவை படை சிப்பாய்களின் நினைவுச் சின்னத்திற்கு அவரால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, மேஜர் ஜெனரல் ரத்னசிறி கணேகொட அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் பொறியியல் சேவைப் படையின் அதிகாரிகளுக்கான உணவகத்தில் சகல அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

அதனையடுத்து அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட தளபதி சிப்பாய்களுடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டதை தொடர்ந்து படைப்பிரிவின் அதிகார ஆணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜண் நிலைகளுக்கான தங்குமிட வசதிகளை பார்வையிட்ட பின்னர் அவர்களுக்கான உரையொன்றினையும் நிகழ்த்தினார்.

மேஜர் ஜெனரல் ரத்னசிறி கனேகொட அவர்கள் பொறியாளர் சேவை படையணியின் தலைமையக வளாகத்திலிருந்து வெளியேறும் முன்பாக படையினர் மற்றும் அதிகாரிகள் வரிசையாக அணிவகுத்து “ஜய ஸ்ரீ” என வாழ்த்து கூறி அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தியமை சிறப்பம்சமாகும்.