Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2021 19:00:26 Hours

கொவிட் - 19 தடுப்பு செயலணியின் தலைவரினால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள்

சில தினங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதிக்கு பரிசாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களில் 10 லிட்டர், 10 ரிபேட்டர் முகமூடிகள் , ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 01 வடிகட்டி, +2 குழாய்கள் மற்றும் 02 + ஒக்ஸிமீட்டர்கள் வியாழக்கிழமை (09) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டன.

அமெரிக்க இலங்கை அறக்கட்டளை ஒன்றினால் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர அவர்களுக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற கொவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உபயோகத்திற்காக பயன்படுத்தக்கூடிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய பாகங்கள் என்பனவே வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டன.

மேற்படி பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தனிடம் இடர் தடுப்பு படையணியின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.