12th September 2021 15:00:02 Hours
முல்லைத்தீவில் கொவிட் -19 தொற்று நோய் பாதிப்புக்கு இலக்கானவர்களின் உபயோகத்திற்கான வைத்திய உபகரணங்களும் மேலதிக பாகங்களும் கொழும்பிலுள்ள பௌத்த இளைஞர்கள் அமைத்தின் உறுப்பினர்களால் முல்லைத்தீவு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே. வாசுதேவா அவர்களிடம் வெள்ளிக்கிழமை(10) கையளிக்கப்பட்டன.
அதற்கமைய 350,000/= பெறுமதியான 05 கைகளில் வைத்து பாவனை செய்யக்கூடிய வகையிலான ஒக்ஸிமீட்டர்கள், 04 சுவாச செறிவூட்டல் முகக்கவசங்கள், 4 ஒட்சிசன் செறிவூட்டிகள் 6 CPAP முகக் கவசங்கள், 10 சுவாச வெளியேற்றத்திற்கான முகக்கவசங்கள், 1 சிரிஞ்ச் பம்ப் உபகரணம், 1 சேலைன் உட்செலுத்தல் இயந்திரம், 1 + ஒக்ஸிமீட்டர் மற்றும் 1 இட்சிசன் சீராக்கி என்பன கோகிலாய் ஸ்ரீ சம்போதி விகாரையின் விகாராதிபதி திசரபு குணரத்ன தேரரின் ஒருங்கிணைப்பில் 59 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனர்ல் ஜீ.டி.பண்டார். 593 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பலமகும்புர ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 593 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பலம கும்புர ,இராணுவ அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.