Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2021 10:00:02 Hours

112 வது பிரிகேட் படையினரால் ஓய்வூதியதாரர்களுக்கு போக்குவரத்து சேவை

112 வது பிரிகேட், 3 வது இலங்கை சிங்கப்படையணி மற்றும் 19 வது இலங்கை தேசிய பாதுகாப்ப்பு படையணி ஆகியவற்றின் படையினரின் ஏற்பாட்டில் 10 செப்டம்பர் 2021 அன்று ஓய்வூதிய தொகையை பெற்றுக்கொள்ள வந்த ஓய்வூதியதாரர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. இதுபோன்ற வசதிகாளனது படையினரால் முன்னரும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள இராணுவத்திற்கு சொந்தமான பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாய பஸ்கள் என்பன மேற்படி பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 112 வது பிரிகேட்டின் படையினர் மேற்படி பிரதேசங்களின் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவர்களின் ஒருங்கிணைப்பு மூலம் போக்குவரத்துக்கான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 11 வது படைப்பிரிவின் வழிகாட்டலின் கீழ் 112 வது பிரிகேட் தலைமையகத்தின் கீழ் ஒருங்கிணைப்பில் பின்பற்றி இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.