Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2021 12:02:53 Hours

பல்லேகலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய இராணுவ வைத்தியசாலையின் நிர்மாண பணிகள் குறித்து நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேற்பார்வை

இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித் ரத்நாயக்க ஆகியோர் வியாழக்கிழமை (2) மலையகத்திலுள்ள படைவீரர்களுக்காக கண்டியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய இராணுவ வைத்தியசாலையின் நிர்மாண பணிகளை மேற்பார்வை செய்தனர்.

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 11 வது படைப்பிரிவை அண்டி அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வைத்தியசாலையின் நிர்மாண பணிகள் திறமை மிக்க இராணுவ பொறியியலாளர்களின் ஒத்துழைப்போடு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . இது தொடர்பிலான மீளாய்வு மாநாட்டில் இறுதி கட்ட பணிகளை ஆக்கபூர்வமாக முக்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மேற்டி புதிய வைத்தியசாலை கட்டிடம் 123 படுக்கைகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலையினருக்காக 4 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்தோடு அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி அணியினருக்கான வைத்திய ஆலோசணைக்கான அறை, எக்ஸ்ரே பிரிவு, ஈசீஜீ பிரிவி, ஆய்வுக்கூடம், கதிரியக்க ஸ்கேனர் இயந்திரம், மருந்தகம், மருந்து அட்டை பிரிவு, வார்டு பிரதானி அலுவலகம், உளச்சார்பு சிகிச்சை பிரிவு, பற் சிகிச்சை பிரிவு, தாதியர் ஓய்வு அறை, உணவக அறைகள், மகளிர் பிரிவு, விஷேட பிரமுகர்களுக்கான பிரிவு, ஓய்வு அறைகள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கான 4 தனியாக சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்ட சகல அதிநவீன டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடியதாக வைத்தியசாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அருகிலுள்ள கட்டிடத்தில் வெளி நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, உடைமாற்று அறை, சத்திரசிகிச்சை அறை, மீட்பு அறை, சலவை பிரிவு, எலும்பு நோய் பிரிவு, நிர்வாக பிரிவு, வைத்திய அதிகாரிகளுக்கான விடுதிகள் உட்பட மேலும் சில பிரிவுகளும் உள்ளன..