Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th September 2021 15:50:28 Hours

கொஸ்கமவிலுள்ள தொண்டர் படையினரால் வெளியேறும் தளபதிக்கு மரியாதை

இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதியாவிருந்து வெளியேறும் மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொடவுக்கு செவ்வாய்க்கிழமை (7) கொஸ்கமவிலுள்ள இலங்கை இராணுவத் தொண்டர் படையின் படையினரால் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மரியாதை செலுத்தப்பட்டது. இதன்போது படைப்பிரிவு வளாகத்திற்கு வருகைத் தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, இந்நிகழ்வுகள் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டன.

வருகைத் தந்த தளபதிக்கு இலங்கை இராணுவ தொண்டர் படையின் பயிற்சி பொறுப்பதிகாரி பிரிகேடியர் நிஹால் சமரவிக்கிரமவினால் வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து படையினருக்கான உரையினை நிகழ்த்திய தளபதி தொண்டர் படை படையினர் எவ்வாறு இராணுவத்தின் தொழில்முறை செயற்பாடுகளிலும் பாதுகாப்பு கடமைகளிலும் பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர் என்பதையும் நினைவுகூர்ந்தார். அத்தோடு எதிர்காலத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படை மேம்பட்ட பிரிவாக உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

அத்தோடு அவரது பதவிக்காலத்தில் அவருக்கு ஆதரவு வழங்கிய சகலருக்கும் நன்றிகளை தெரிவித்த அவர், சிவில் ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டர். மேலும் போரில் உயிர் நீத்த இலங்கை இராணுவ தொண்டர் படையின் வீரர்களை நினைவுகூர்ந்தோடு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதன் போது இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்கவினால் இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக பதவியேற்கவிருக்கும் முன்னாள் தளபதிக்கு நினைவு சின்னத்தை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இலங்கை இராணுவ தொண்டர் படையின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டனர்.