Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th September 2021 17:20:44 Hours

ஓய்வுபெற்ற கேணல் கஸ்தூரியாராச்சியின் பூதவுடல் தகனம்

கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த கேணல் எப்.எஸ். கஸ்தூரியாராச்சி (ஓய்வு) திங்கள்கிழமை (6) காலமானார். அன்னாரின் இறுதி கிரியை நிகழ்வுகள் இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் படைத் தளபதி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் செவ்வாய்க்கிழமை (7) காலை பொரளை பொது மயானத்தில் இறுதி கொவிட் -19 சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இடம்பெற்றன.

கேணல் எப்எஸ் கஸ்தூரிஆராச்சி (ஓய்வு) டிசம்பர் 23, 1923 இல் பிறந்தார். பாடசாலை கல்வியை நிறைவு செய்துகொண்டதன் பின்னர், அவர் மே 01, 1952 அன்று இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக நியமனம் பெற்றார். தனது சேவைக்காலத்தில் இராணுவத்திற்கு பல்வேறு சேவைகளை வழங்கியுள்ளார். அதற்கமைய இராணுவ கொடுப்பனவு மற்றும் பதிவுகள் பிரிவின் பதவி நிலை அதிகாரி II தர நிலை அதிகாரியாகவும், இராணு சம்பள பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் அதிகாரபூர்வ கட்டளை அதிகாரியாகவும், இராணுவச் செயலாளரின் பணிகளுக்கு பொறுப்பான அதிகாரியாகவும் நியமனங்களை வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கேணல் எப்எஸ் கஸ்தூரியாராச்சி (ஓய்வு) இராணுவத்திற்கும் நாட்டிற்கும் அர்பணிப்பான பல சேவைகளை ஆற்றியுள்ளார். அத்தோடு 26 வருடங்களுக்கும் மேலாக அதிகாரியாகவும் சேவையாற்றிய அவர் 1978 நவம்பர் 12 ஆம் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். அவர் சிறந்த மனிதாபிமானம் கொண்டவராகவும் நற்குணங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் அவர் என்றும் இலங்கை தாயின் மகனாக நினைவில் நிற்பார்.