Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th September 2021 13:00:59 Hours

கொவிட் – 19 தடுப்புச் செயலணியின் தலைவரால் யாழ்ப்பாணம், பேராதனை மற்றும் மட்டகளப்பு வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் பரிசளிப்பு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இலங்கை அமெரிக்க மன்றத்தினால் கொவிட் -19 நோயாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்துவதற்காக பரிசளிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினூடாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

அதற்கமைய 10 லீட்டர் கொள்ளவுடைய 05 ஒட்சிசன் செறிவூட்டிகள், 40 இளம் வயதினருக்கான மீள் பாவனை செய்யக்கூடிய ஒட்சிசன் முகக் கவசங்கள், 10 வடிகட்டிகள் +1 குழாய்கள் மற்றும் 05 இரத்த பாதிப்பை கணிப்பிட உதவும் ஒக்ஸிமீட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் திங்கள்கிழமை (6) யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டி. சத்தியமூர்த்தியிடம் கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட 521 வது பிரிகேட்டின் சிரேஸ்ட அதிகாரியான லெப்டினன் கேணல் பிரசாத் பெர்னாண்டோ மேற்படி மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் 14 வது கஜபா படையணி மற்றும் 4 வது இலங்கை வைத்திய படையின் கட்டளை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதேநேரம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவிலுள்ள அறக்கட்டளையிலிருந்து கிடைக்கப்பெற்ற மருத்துவ உபகரணங்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விரசூரிய அவர்களின் மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பி்ல் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

அதற்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, களவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை மற்றும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றிற்கு 10 லீற்றர் ஒட்சிசன் செறிவூட்டிகள், சுவாச செறிவுக்கான ஒட்சிசன் முகக் கவசங்கள் மற்றும் இரத்தப் பாதிப்புக்களை கண்டறிவதற்கான ஒக்ஸிமீட்டர்கள் உள்ளிட்ட வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி உபகரணங்கள் 231 வது பிரிகேட் தளபதி கேணல் திலீப பண்டார மற்றும் 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே ஆகியோரால் ஏனைய அதிகாரிகள் சிலருடன் இணைந்து மேற்படி உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

அதேநேரம் இதேபோன்ற வைத்திய உபகரணங்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் 10 லிட்டர் கொள்ளளவுடைய 03 ஒட்சிசன் செறிவூட்டிகள், 30 இளம் வயதினருக்கான மீள பயன்படுத்தக்கூடிய ஒட்சிசன் முகக் கவசங்கள், 1 வடிகட்டி +1 குழாய் இரண்டு மருந்து பெட்டிகள் மற்றும் 12 இரத்த பாதிப்புக்களை கணிப்பதற்கான ஒக்ஸிமீட்டர்கள் என்பன மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அவை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு 6 செப்டம்பர் 2021 அன்று உத்தியோகபூர்வமான வழங்கி வைக்கப்பட்டன. அதன்படி, மேற்படி மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய பாகங்களை 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள் 111 வது பிரிகேட் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து பேராதனை போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.