Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th September 2021 09:00:49 Hours

அம்பாறை ஹார்டி கற்கை நிறுவக வளாகத்தில் படையினர் சிரமதானம்

24 வது படைப்பிரிவின் 241 வது பிரிகேடின் 16 வது தேசிய பாதுகாப்பு படையணியின் சிப்பாய்களால் அம்பாறையிலுள்ள ஹார்டி உயர் தொழில்நுட்ப கற்கை நிறுவக வளாகத்தில் வியாழக்கிழமை (02) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சிரமதான பணிகளின் போது படையினரால் நிறுவக வளாகம் தூய்மையாக்கப்பட்டு வேலிகளும் சீரமைக்கப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி 24 வது படைப்பிரிவு தளபதி மற்றும் 241 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், 16 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சமந்த கொடிதுவக்கு அவர்களின் மேற்பார்வையில் சிரமாதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.