Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2021 12:30:30 Hours

இலங்கை வைத்திய சங்கத்தின் நன்கொடையான ஒக்ஸிமீட்டர்கள் கம்பஹா மற்றும் கொழும்பில் பகிர்ந்தளிப்பு

வைத்திய நிபுணர் டாக்டர் பத்மா குணரத்ன தலைமையிலான இலங்கை வைத்திய சங்கம் (SLMA) கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்திற்கு பரிசளித்த 50 க்கும் மேற்பட்ட பல்ஸ் ஒக்ஸிமீட்டர்கள் இலங்கை வைத்திய சங்கம் (SLMA) மற்றும் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் NOCPCO இணைந்து நிர்வகிக்கும் கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை வழங்கும் முறைமையின் கீழ் சிகிச்சைப் பெறுபவர்களில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் மிகவும் பொருத்தமானவர்களுக்கு வெள்ளிக்கிழமை (3) பகிர்ந்தளிக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடிய 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன குறித்த பகிர்தளிப்பை முன்னெடுத்தார்.

தலைமையிலான இலங்கை வைத்திய சங்கம் (SLMA) மற்றும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இணைந்து கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை வழங்கும் முறைமையினை தொலைபேசி எண் 1904 மற்றும் டாக்டர் அழைப்பு 247 ஆகியவற்றின் ஊடாக நிர்வகிக்கின்றது. இவ்வாறு சகிச்சைப் பெறுபவர்களின் அவசர தெவைக் கருதி பகிர்ந்தளிப்பதற்காக 250 பல்ஸ் ஒக்ஸிமீட்டர்கள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றன.

வியாழக்கிழமை (2) நடைப்பெற்ற வாராந்த கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் முடிவில் இலங்கை வைத்தியர் சங்க தலைவி டாக்டர் பத்மா குணரத்ன 'கொவிட்​ சஹன ' நலக் கிளை ஊடாக சுமார் ஒரு மில்லியன் மதிப்புள்ள தொகுதியினை சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் முன்னிலையில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவெந்திர சில்வாவிடம் வழங்கியிருந்தார்.