Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th September 2021 18:21:40 Hours

சிறப்பு படையணி தலைமையகத்தின் அனைத்து நிலைகளுக்குமான சகல நவீன வசதிகளுடன் கட்டங்கள்

நாவுல சிறப்புப் படையணி (எஸ்எஃப்) தலைமையகம் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியும் சிறப்பு படையணியின் படைத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அதன் அதிநவீன புதிய வசதிகளுடனான கட்டிட வளாகம் மற்றும் புதிய அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்ட் உணவறை ஆகியவற்றை திறந்து வைக்க அங்கு விஜயம் செய்த போது இன்று (5) காலை சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது வண்ணமயமான இராணுவ மரியாதைகளை வழங்கியது.

சிறப்பு படையணி தலைமையக நிலையத் பிரிகேடியர் நிசங்க எரியகம வரவேற்றதனை தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இதர இராணுவ மரியாதைகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு முன்பதாக சிறப்பு படையணியின் சிரேஸ்ட அதிகாரிகளான தாக்குதல் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவா சேனரத்யாபா ஆகியோர் இராணுவ தளபதியினை அன்புடன் வரவேற்றனர்.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நடைப்பெற்ற விழாவில் ஜெனரல் சவேந்திர சில்வா தனித்தனி பெயர் பலகைகளை திரைநீக்கம் செய்துவைத்தார். அவற்றில் சேவைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய புதிய வசதியிலான சிற்றுண்டிசாலை, தையல்கடை, சலூன் மற்றும் சில்லறைக் கடை ஆகியவை உள்ளடங்கும்.

அன்றைய நடவடிக்கைகளின் இரண்டாவது கட்டமாக ரெஜிமென்ட் சார்ஜென்ட் மேஜர் (ஆர்எஸ்எம்) தனது படையணித் தளபதியை புதிய அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்ட் உணவறையினை திறந்து வைப்பதற்கு அழைத்தார். மகா சங்கத்தின் உறுப்பினர்களின் 'செத் பிரீத்' பாராயணங்களுக்கு மத்தியில் பெயர் பலகை திறை நீக்கம் செய்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அன்றைய பிரதம அதிதி புதிய கட்டிடத்தின் உள்ளே அதிகாரிகள் மற்றும் ரெஜிமென்ட் சார்ஜென்ட் மேஜர் (ஆர்எஸ்எம்) கட்டிடத்தை பார்வையிட்ட அவர் அதன் சிறந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் தனது பாராட்டை தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதியில் சிறப்பு படையணியின் ரெஜிமென்ட் சார்ஜென்ட் மேஜர் நகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தமையின் அமையாளமாகவும் நன்றி பாராட்டுதலை குறிக்கும் வகையிலும் ஒரு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கி வைத்தார். அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பதாக பிரதம அதிதி ஜெனரல் சவேந்திர சில்வா சுறப்பு படையணியின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக்குரிய கருத்துக்களையும் நினைவுகளையும் பதிவிட்டார். சிறப்பு படையணி பிரிகேட் தளபதி பிரிகேடியர் துஷார மஹாலேகமகே, ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் விபுல இயலகே, சிறப்புப் படையணி அலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சில சிப்பாய்களும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் நிசங்க எரியகம மற்றும் சிறப்பு படையணி பேரவை உறுப்பினர்களின் முழுமையான ஆதவு மற்றும் சிறப்பு படையணி தலைமையகத்தின் நிதியுடன் குறித்த இரண்டு திட்டங்களும் குறுகிய காலத்தில் பொறியியலாளர் சேவை படை மற்றும் சிறப்பு படையணி படையினரால் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன. சிறப்பு படையணி படைத் தளபதி சில மாதங்களுக்கு முன்பு அங்கு விஜயம் செய்தபோது இந்த வசதிகளை நிறுவுவதற்கான ஆலோணைகளை வழங்கியிருந்தார்.